ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதால் மக்கள்நலன் சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கத்திற்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் தவிர்த்து வருகிறார்.
இந்தநிலையில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி, ராமநாதபுரம் நகரில் உள்ள அவரது சிலைக்குத் திமுக எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் நேற்று மரியாதை செலுத்தினார். அப்போது அதே பகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்ற நிகழ்ச்சியை அவர் புறக்கணித்தார்.
திமுகவின் உட்கட்சிப் பூசலால் ராமநாதபுரத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.