ஆந்திராவில் மனைவியைக் கட்டிப்போட்டு கணவர் பெல்ட்டால் அடித்து இரவு முழுவதும் துன்புறுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கலுஜுவல்லப்பாடு பகுதியில் பாலாஜி என்பவர் தனது மனைவி பாக்கியலட்சுமியைப் பணம் கேட்டுக் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இரவு முழுவதும் அடித்து சித்ரவதைச் செய்ததில் பாக்கியலட்சுமியின் முதுகு, கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், பாலாஜி கைது செய்யப்பட்டார்.