சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 400 டிராக்டர்கள் கொண்டுவரப்பட்டன.
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் வடகிழக்கு பருமழைத் தொடங்க உள்ளதை அடுத்த மாநில பேரிடர் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
அதன்படி வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக விழுப்புரத்தில் இருந்து 400 டிராக்டர்கள் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டன. இந்த வாகனங்கள் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டுள்ளன.