2025 நிதியாண்டில் 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது இந்திய பாதுகாப்பு துறையின் ஆற்றலைப் பறைசாற்றுகிறது.
இதுபற்றிப் பேசியுள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய பாதுகாப்புத்துறை வலுவடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் சுமார் 23 ஆயிரத்து 622 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்களை DRDO ஏற்றுமதி செய்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றுவதாகக் கூறியுள்ளார்.
உலக நாடுகளுக்கு இந்தியாவில் தயாரான ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது, பிற நாடுகளின் நம்பிக்கையை இந்தியா பெற்று வருவதையே குறிக்கிறது. உதாரணமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நாட்டின் பாதுகாப்புத்துறை ஆற்றிய நிகரற்ற பணிகளால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது.
மேலும், இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை, பினாகா ராக்கெட் அமைப்பு, ஆகாஷ் ஏவுகணை போன்றவை சர்வதேச அளவில் பிரபலமடைந்து வருகின்றன. இவற்றின் ஏற்றுமதி வருவாயை ஈட்டுவது மட்டுமல்லாமல், உலக நாடுகளிடையே இந்தியாவின் நம்பகத்தன்மையையும் அதிகரித்து வருகிறது.
















