பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை ஒட்டி, திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வெளிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சிறிய நகரத்திலிருந்து உலக அரங்கில் பிரதமர் முன்னெடுத்துள்ள பயணம் மிகவும் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் தலைமை ஒவ்வொரு இந்தியரிடமும் நம்பிக்கையையும், பெருமையையும் தூண்டியுள்ளதாக நடிகர் அஜய் தேவ்கன் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் உலகளவில் நமது நாட்டை எடுத்துச் செல்லும் பிரதமர் மோடி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என நடிகை ஹேம மாலினி வாழ்த்தியுள்ளார்.
மேலும் அமிர் கான், சுரேஷ் கோபி, ஆலியா பட் உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடிக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.