பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை - சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Sep 13, 2026, 04:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 08:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஹாலிவுட் நடிகையான சிட்னி ஸ்வீனி விரைவில் பாலிவுட் திரைத்துறையில் அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்குத் திரைப்படத்தில் நடிக்க 530 கோடி ரூபாய் வரைச் சம்பளம் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றிச் சற்று விரிவாக இந்தச் செய்தி தொகுப்பில் காணலாம்…

அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான சிட்னி ஸ்வீனி, ‘யூபோரியா’ (EUPHORIA), ‘எவ்ரிதிங் சக்ஸ்’ (EVERYTHING SUCKS), ‘வைல்ட் லோட்டஸ்’ (WILD LOTUS) போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பிரபலமடைந்தார். அண்மையில் இவர் நடித்த ‘எக்கோ வேலி’ (ECHO VALLEY) என்ற திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘கிறிஸ்டி’ (CHRISTY) என்ற புதிய திரைப்படத்தில் அமெரிக்கக் குத்துச்சண்டை வீராங்கனையான கிறிஸ்டி மார்டினின் கதாப்பாத்திரத்தில் சிட்னி நடித்து வருகிறார்.

இந்நிலையில், உலகின் மிக அதிகப் பொருட்செலவில் உருவாக்கப்படவுள்ள இந்திய திரைப்படம் ஒன்றில் நடிக்க, ஹாலிவுட் பிரபலமான நடிகைச் சிட்னி ஸ்வீனி ஒப்பந்தமாகியுள்ளதாகப் பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்காக அவருக்கு 45 மில்லியன் பவுண்டுகள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 530 கோடி ரூபாய் வரைச் சம்பளம் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் சுமார் 35 மில்லியன் பவுண்டுகள் வரைச் சம்பள தொகையாகவும், 10 மில்லியன் பவுண்டுகள் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களாகவும் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படத்தில் ஒரு அமெரிக்கக் கதாப்பாத்திரமாக நடிக்கவுள்ள சிட்னி ஸ்வீனி, இந்திய பிரபலம் ஒருவரைக் காதலிக்கும் கதாப்பாத்திரமாகத் திரையில் தோன்றுவார் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் நியூயார்க், பாரிஸ், லண்டன், துபாய் போன்ற பல சர்வதேச நகரங்களில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், திரைப்படத்தில் நடிக்க அவருக்கு வழங்கப்படவுள்ள சம்பளத் தொகையைக் கேட்டு நடிகைச் சிட்னி ஸ்வீனியே அதிர்ந்து போய்விட்டதாகவும், இந்த வாய்ப்பு உலகளவில் அவரைப் பிரபலமடைய செய்யும் என்றும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

திரைப்படத்தின் கதைக்களம் சுவாரஸ்யமாக உள்ள போதிலும், இந்த வாய்ப்பை ஏற்க வேண்டுமா இல்லையா என்பது பற்றிச் சிட்னி தொடர்ந்து சிந்தித்து வருவதாகவும், இது பற்றி அவரது பிரதிநிதிகள் இன்னும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்தும் ஒரு வாய்ப்பாக இந்த முயற்சி அமையுமா என்பதைக் காண ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், சர்வதேச அளவில் பரவலான ரசிகர்கள் வட்டத்தைக் கொண்டுள்ள நடிகைச் சிட்னி ஸ்வீனி, இந்தப் பாலிவுட் பட வாய்ப்பை ஏற்பாரா என்பதே ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

Tags: cinema newsTODAY CINEMA NEWSFamous Hollywood actress making her Bollywood debut - do you know how much her salary is?
Share
Tweet
SendShare
Previous Post

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Next Post

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies