'அரபு - இஸ்லாமிய நேட்டோ' உருவாக்க யோசனை... - இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?
Sep 17, 2026, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 08:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பின் அங்கு கூடிய 40-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள், ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்கம் குறித்த யோசனையை முன்வைத்தன. இந்த முயற்சி இந்தியாவிற்குப் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. அதுபற்றி விரிவாக விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு…

கத்தாரில் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி ஹமாஸ் தலைவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீத இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனைப் பாதுகாப்பு நடவடிக்கை எனக் குறிப்பிட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, தீவிரவாதிகளுக்குத் தங்குமிடம் அளிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதனை இஸ்ரேல் மேற்கொள்ளும் என எச்சரித்தார்.

இந்த நிகழ்வுக்குப் பின் கத்தார் தலைநகர் டோஹாவில் பெரிய அளவில் மாநாடு ஒன்றை நடத்திய 40-க்கும் மேற்பட்ட அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேலின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

குறிப்பாகக் கத்தார் எமீர் தமிம் பின் ஹமத் அல்தானி, காசாவை வாழ முடியாத நிலைக்கு இஸ்ரேல் தள்ளுவதாகக் குற்றம் சாட்டினார். துருக்கி அதிபர் எர்டோகானும் இஸ்ரேலை பொருளாதார ரீதியில் ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதே வேளையில், இஸ்ரேலை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கை தேவை என எகிப்து, ஈரான், ஈராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் எடுத்துரைத்தன.

இந்த மாநாட்டில் முக்கிய பங்கு வகித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஈஷாக் தார் ஆகியோர், இஸ்ரேலின் திட்டங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த படை அவசியம் எனத் தெரிவித்தனர். அதனடிப்படையில் ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ என்ற புதிய ராணுவ கூட்டமைப்பை உருவாக்கும் யோசனையை, மாநாட்டில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஆதரித்தன.

இந்நிலையில், பாகிஸ்தானின் பங்களிப்பு மற்றும் துருக்கியின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி இந்தியாவின் பாதுகாப்பிற்குப் புதிய சவால்களை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தான் காஷ்மீர் பிரச்னையை மீண்டும் உலக அரங்கில் எழுப்ப வாய்ப்புள்ளதால், இது இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு விவகாரத்தில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாகக் கூட்டமைப்பில் உள்ள ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மற்ற அனைத்து நாடுகளும் இணைந்து நேட்டோ பாணியில் எதிர்த்தாக்குதல் நடத்தும் என்பதால், இந்தக் கூட்டமைப்பு உருவாவது இந்தியாவிற்கு அசாதாரண சூழலை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

மற்றொருபுறம், இந்தியா-இஸ்ரேல் இடையேயான உறவு தற்போது வலுப்பெற்றுள்ள நிலையில், புதிதாக உருவாகவுள்ள ராணுவ கூட்டமைப்பின் பார்வையில் இந்தியா, இஸ்ரேல் பக்கம் நிற்பதாகத் தோன்றும் அபாயமும் உள்ளது. இந்தச் சூழலில், ‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ என்ற ராணுவ கூட்டமைப்பு உருவாக்கம் தற்போது வெறும் பேச்சுவார்த்தை மட்டத்தில் இருந்தாலும், அதன் எதிர்கால முன்னேற்றங்களைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய சூழலுக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

Tags: இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள்இஸ்லாமிய நாடுகள்Indiatoday newsThe idea of ​​creating an 'Arab-Islamic NATO'... - What are the new challenges facing India?அரபு - இஸ்லாமிய நேட்டோ
Share
Tweet
SendShare
Previous Post

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Next Post

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

Related News

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

இன்றைய தங்கம் விலை!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies