பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, தருமபுரம் ஆதின மடாதிபதி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய வாழ்த்து கடிதத்தில்,
பாரத மாதாவுக்கு நீங்கள் செய்யும் அயராத சேவையும், சனாதனத் தர்மத்தை நிலைநிறுத்துவதற்கான உங்கள் பக்தியும் பாராட்டத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.
காசி-தமிழ் சங்கமம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் 1000வது ஆண்டு புனிதப் பிரதிஷ்டை போன்ற உங்கள் வரலாற்று முயற்சிகளை நாங்கள் நன்றியுடன் நினைவு கூர்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் மோடியைச் சிவபெருமான் ஞானத்துடனும் வலிமையுடனும் தொடர்ந்து வழிநடத்துவார் எனத் தருமபுரம் ஆதின மடாதிபதி தெரிவித்துள்ளார்.
ஞானம், தைரியம் மற்றும் இரக்கத்துடன் தேசத்திற்குத் தொடர்ந்து சேவைச் செய்ய பிரதமர் மோடிக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.