பாகிஸ்தான் – சவுதி இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான செய்தியை ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் ஏற்கனவே பரிசீலனையில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இருநாடுகள் இடையேயான ஒப்பந்தம் இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் முனைப்பாக உள்ளோம் என வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.