மதுரை செல்லூரில் பாதாளச் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுக் கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக, மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரைச் செல்லூரின் 23, 24வது வார்டுகளில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, பல மாதங்களாகக் கழிவுநீர் தேங்கிச் சுகாதார சீர்கேடு நிலவியது.
இதுகுறித்த செய்தி தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் வெளியானது. இந்நிலையில் இதன் எதிரொலியாக, மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தேங்கிய கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகக் குடியிருப்புவாசிகளிடம் அவர் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தி வெளியிட்ட தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அப்பகுதி குடியிருப்புவாசிகள் நன்றித் தெரிவித்தனர்.