வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க இன்னும் அதிக ஆற்றலுடனும் பக்தியுடனும் தொடர்ந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளேன் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தனது பிறந்த நாளையொட்டி வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றித் தெரிவித்துள்ள பிர்தமர் மோடி, நீங்கள் என் மீது வைத்து இருக்கும் எண்ணற்ற விருப்பங்களும், நம்பிக்கையும் மிகுந்த பலத்தை தருகின்றன எனக் கூறியுள்ளார்.
இந்த வாழ்த்துக்களை தனக்கு மட்டும் அல்லாமல், சிறந்த இந்தியாவை உருவாக்க நாம் இணைந்து செய்யும் பணிக்கு கிடைத்த ஆசீர்வாதமாகப் பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அன்பு என்னை பலப்படுத்துகிறது, ஊக்கப்படுத்துகிறது, இதற்காக மக்களுக்கு நன்றி எனக் கூறியுள்ள பிரதமர் மோடி, மக்களின் அன்பு என் இதயத்தை ஆழமாகத் தொட்டுள்ளது, அனைவரின் நல்ல ஆரோக்கியத்துக்கும் நல்வாழ்வுக்கும் நான் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
வளர்ந்த பாரதம் என்ற கனவை நனவாக்க இன்னும் அதிக ஆற்றலுடனும் பக்தியுடனும் தொடர்ந்து பணியாற்ற தான் உறுதி பூண்டுள்ளேன் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.