ஏழை, எளிய மக்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வரும் நடிகரும், நடன இயக்குநருமான லாரன்ஸ், கண்மணி அம்மாவின் அன்னதான விருந்து என்ற புதிய அன்னதான இயக்கத்தை தொடங்கியுள்ளார்.
பொதுவாகப் பணக்காரர்கள் சாப்பிடும் உணவு வகைகளைச் சாதாரண விளிம்பு நிலை மக்களும் சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த அன்னதான இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய லாரன்ஸ், தனது அம்மாவின் பெயரில் இந்த முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளார்.
இதன் தொடக்க விழாவில் நரிக்குறவ மக்களை வரவழைத்து மீன், சிக்கன் உள்ளிட்ட அசைவ விருந்தை, நடிகர் லாரன்ஸ் அவரது கையால் பரிமாறினார். இந்த அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவருந்திய நரிக்குறவ மக்கள், நடிகர் லாரன்சுக்கு ஆனந்த கண்ணீருடன் நன்றித் தெரிவித்தனர்.