சென்னையில் படப்பிடிப்பில் இருந்த ரோபோ சங்கருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி வந்த ரோபோ சங்கர், வெள்ளித்திரையில் புலி, விஸ்வாசம், மாரி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இதனிடையே உடல்நலக் குறைவு காரணமாக மெலிந்து காணப்பட்ட ரோபோ சங்கர், படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்குப்பின் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.