தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் இரவு பெய்த மழையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முஷீராபாத்தை சேர்ந்த ஷரிபுதின் என்ற 27 வயது இளைஞர் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
அப்போது பால்கம்பேட்டை சுரங்கப்பாதையில் வெள்ள நீரில் சிக்கி மூச்சுத்திணறி அவர் உயிரிழந்தார். பின்னர் பொதுமக்கள் கயிறு கட்டி அவரது உடலை மீட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.