பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி சேலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி, தனது ஆட்டோவில் ஏழைகளுக்கு 15 நாட்களுக்கு இலவசப் பயணம் வழங்குவதாக அறிவித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த முரளிதரன் என்பவர், பாஜகவில் மண்டல செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.
இவர் தனக்கு சொந்தமான எலக்ட்ரிக் ஆட்டோவைத் தினசரி வாடகைக்கு விட்டு வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, வரும் அக்டோபர் 2ம் தேதி வரை தனது ஆட்டோவில் ஏழைகளுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும் என முரளிதரன் அறிவித்துள்ளார்.
இதனை பாஜக மாநில துணைத் தலைவர்களுள் ஒருவரான துரைச்சாமி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முரளிதரன், பிரதமர் மோடியின் சேவைக்குத் துணை நிற்கும் வகையில் இலவசப் பயண திட்டத்தைத் தொடங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.