சேலம் அருகே இளைஞர் ஒருவர் கஞ்சா போதையில் காவல் நிலையத்தில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார்.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் பேருந்துகளில் ஏறும் பயணிகளிடம் கஞ்சா போதையில் தகராறு செய்துள்ளார்.
அப்போது அரசு பேருந்து நடத்துனர்கள் அவரைத் தாக்கி பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்துப் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு வந்த இளைஞர், நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கஞ்சா போதையில் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார்.
விசாரணையில் அவரது பெயர் சேலம் நான்கு ரோடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் எச்சரித்து அனுப்பினர்.