நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம், ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம், ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமாருக்குப் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது குட் பேட் அக்லி திரைப்படம்.
இந்தப் படத்தில் தனது பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
இதனால் இந்தப் படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி பாடல்களைப் பயன்படுத்துவதாக தயாரிப்பு நிறுத்துவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து, நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து குட் பேட் அக்லி படம் நீக்கப்பட்டுள்ளது.