மயிலாடுதுறையில் காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை வன்கொடுமைத் தடுப்பு சட்ட வழக்காக மாற்றிக் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
அடியமங்கலம் பகுதியை சேர்ந்த வைரமுத்து என்பவரும், அதே பகுதியை சேர்ந்த மாலினியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 15ம் தேதி வைரமுத்து அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலைச் செய்யப்பட்டார். இதையடுத்து வைரமுத்துவின் கொலைக்குப் பெண்ணின் வீட்டார்தான் காணரமெனக் கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து வைரமுத்துக் கொலை வழக்கை, வன்கொடுமைத் தடுப்பு சட்ட வழக்காக மாற்றப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
வழக்கில் பெண்ணின் தாயார் விஜயா, சகோதரர் குகன், அன்புநிதி, பாஸ்கர் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.