நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவை அளிக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கியுடன் தொலைபேசி வாயிலாகப் பேசியதாக தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நேபாளத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
மேலும், நேபாளத் தேசிய தினத்தை முன்னிட்டு நேபாள மக்களுக்கும், பிரதமர் சுஷிலா கார்க்கிக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.