மத்திய அரசின் நடவடிக்கையால் தீப்பெட்டி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கப்பட்டதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீன லைட்டர்களால் தீப்பெட்டி தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டது என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன் சீன லைட்டர்களுக்கு வரிவிதிப்பு உயர்த்தப்பட்டதாக தெரிவித்தார்.
“தீப்பெட்டி நூற்றாண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார்.