1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் இடையூறு செய்யும் திமுக வட்டச்செயலாளர் - அண்ணாமலை கண்டனம்!
Sep 19, 2025, 12:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் இடையூறு செய்யும் திமுக வட்டச்செயலாளர் – அண்ணாமலை கண்டனம்!

Web Desk by Web Desk
Sep 19, 2025, 10:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய 1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் திமுக வட்டச் செயலாளர் தடுப்பதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, 1,350 டன் யூரியா, குஜராத்திலிருந்து சரக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த யூரியா, மதுரை கூடல்புதூர் பகுதியில் உள்ள குட்ஷெட்டிற்கு வந்தடைந்த நிலையில், திமுக வட்டச் செயலாளராக உள்ள செந்தில் என்பவர், லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்.

மாலை 6 மணிக்கு முன்பாக லோடு ஏற்றினால், ரூபாய் 100 கூலியும், 6 மணிக்கு மேல் லோடு ஏற்றினால், ரூபாய் 300 கூலியும் வழங்கப்பட வேண்டும். லோடுமேன் கூலியில் அதிகம் கமிஷன் வாங்குவதற்காக, இந்த திமுக வட்டச் செயலாளர் செந்தில், மாலை 4 மணிக்கே வந்த யூரியா மூட்டைகளை ஏற்ற விடாமல், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவரையும் அலைக்கழிக்கும் வகையில் ரவுடிகளை வைத்து, லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

இதனால், தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய 1350 டன் யூரியா மூட்டைகள் மதுரை குட்ஷெட்டில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, நாள்தோறும் 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. ஒருபுறம், தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு என்று, மத்திய அரசுக்கு, முதலமைச்சர்  கடந்த 16.09.2025 அன்று கடிதம் எழுதி நாடகமாடியிருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு புறம், மதுரையை வந்தடைந்த யூரியா மூட்டைகளை, தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல விடாமல், அவரது கட்சிக்காரர் தடங்கல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் பாதிக்கப்படுவது, தென்மாவட்ட விவசாயிகளே என்றும் அவர் கூறியுள்ளார்.

உடனடியாக, யூரியா மூட்டைகளை தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்குத் தொடர்ந்து இடைஞ்சலாக நடந்து கொள்ளும் தனது கட்சியினரை, முதலமைச்சர் ஸ்டாலின்
, எச்சரித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: SenthilMadurai good shed.MaduraiannamalaiKudalputhururea bundles
ShareTweetSendShare
Previous Post

செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

அனைத்து மதங்களையும் நம்புகிறேன் – பி.ஆர்.கவாய் விளக்கம்!

Related News

அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு 12 அடி உயர ட்ரம்ப் சிலை!

ஏர் இந்தியா விமானம் விபத்து : போயிங் நிறுவனம் மீது வழக்கு!

உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் மேக வெடிப்பு!

சேலம் அருகே சொகுசுப் பேருந்தில் 3 கிலோ தங்கம் கொள்ளை – இருவர் கைது!

திருவண்ணாமலை : ஆசிரியர் அடித்து மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததால் பரபரப்பு!

சாலை நடுவில் இருந்த மின் கம்பம் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அகற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் அரசு பேருந்து படிகட்டு உடைந்து விபத்து – மாணவர்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு திரைத்துரையினர் கண்ணீர் அஞ்சலி!

வாணியம்பாடி அருகே கொட்டித் தீர்த்த மழை – அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய நீர்!

செங்கம் அருகே ஆசிரியர் தாக்கியதால் மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததாக புகார்!

அனைத்து மதங்களையும் நம்புகிறேன் – பி.ஆர்.கவாய் விளக்கம்!

1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் இடையூறு செய்யும் திமுக வட்டச்செயலாளர் – அண்ணாமலை கண்டனம்!

செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

பிரிட்டன் அரச குடும்ப நெறிமுறைகளை மீறிய ட்ரம்ப் – வலுக்கும் கண்டனம்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை – மாயமான 10 பேரை தேடும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies