திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆசிரியர் அடித்து மாணவனின் காது ஜவ்வு கிழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புளியம்பட்டி பகுதியை சேர்ந்த தர்ஷன், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், குழுவாக அமர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது, குறும்புத்தனம் செய்த மாணவர் குறித்து விசாரிக்காமல் தர்ஷன் மற்றும் மற்றொரு மாணவனை ஆசிரியர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தர்ஷனின் காது ஜவ்வு கிழிந்து நிலையில் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.