நெல்லை ஆத்துக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையின் நடுவில் இருந்த மின் கம்பம், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அப்புறப்படுத்தப்பட்டது.
ராதாபுரம் அருகே உள்ள இளைய நயினார் குளம் ஆத்துக்குறிச்சி இணைப்பு சாலையில் பல ஆண்டுகளுக்கு முன், மின் கம்பம் அமைக்கப்பட்டது.
அந்த மின்கம்பம் அகற்றப்படாமலேயே அதைச்சுற்றிப் புதிய தார் சாலை போடப்பட்டது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்துத் தமிழ் ஜனத்தில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியால் சாலையில் நடுவே இருந்த மின் கம்பம் அகற்றப்பட்டுச் சாலை ஓரத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.