சேலம் அருகே சொகுசுப் பேருந்தில் இருந்து 3 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓரிரு தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் டோல்கேட்டில், சொகுசு ஆம்னி பேருந்தில், நகை பட்டறை ஊழியரிடம் இருந்து 3 கிலோ தங்ககட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஆம்னி பேருந்தில் இருந்து தங்க கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த மெரிஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.