இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லலாகேவின் தந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகே சென்றிருந்தார். ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தகவல் வந்துள்ளது. ஆனால் போட்டி முடிந்தவுடன் இந்த செய்தி அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை சக வீரர்கள் தேற்றி மைதானத்தை விட்டு அழைத்து சென்றனர்.
பின்னர் துனித் வெல்லாலகே விமானம் மூலம் இலங்கை திரும்பினார். ஆப்கனுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.