அமெரிக்காவின் சிகாகோவில் மிகவும் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் டிரம்ப்பின் குடியேற்ற கொள்கைகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த பரம்ஜித் சிங் எனும் தொழிலதிபர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா வந்துவிட்டு மீண்டும் அமெரிக்காவின் சிகாகோவின் ஓ ஹேர் விமான நிலையத்துக்குத் திரும்பியுள்ளார்.
அப்போது அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் தொழிலதிபர்ப் பரம்ஜி சிங் கைது செய்யப்பட்டார்.
அதற்கு அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டண தொலைபேசியை பணம் செலுத்தாமல் பயன்படுத்தியதே காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், பரம்ஜித் சிங் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பழைய வழக்கிற்காக அவரை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதம் எனவும் குற்றம்சாட்டினர்.
தனது அரசுக்கு எதிரானவர்களை வெளியேற்றும் வகையில், அதிபர் டிரம்ப் குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கியுள்ளார்.
அதற்காக ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட மிகவும் பழமையான வழக்கு ஒன்றை தேடி எடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்த சம்பவம் விமர்சனத்துக்க் உள்ளாகியுள்ளது.