புதுக்கோட்டை நகரக் காவல் நிலையம் அருகே மளிகை கடைக்குள் நுழைந்து திருட முயன்ற இருவரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.
தெற்கு ராஜ வீதி பகுதியில் கோபால் என்பவர் மளிகை கடை நடந்தி வந்துள்ளார். நள்ளிரவில் கடைக்குள் நுழைந்த இருவர், கடையில் இருந்த பணத்தை திருட முயன்றனர்.
அப்போது, கடையின் ஷட்டர் திறந்து இருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள், காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.