விஜய் அரசியலுக்கு வந்ததுபோல், அனைவரும் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் என்று நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் பூசாரிபட்டியில் நடைபெற்ற சக்தி திருமகன் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியல் சார்ந்து அரசியலை வெளிப்படையாகக் கூறாமல் மிகவும் வித்தியாசமாக இப்படத்தை இயக்குநர் எடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.