ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் எறிந்த பந்து, நடுவர் மீது பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
துபாயில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி விமரிசையாக நடந்து வருகிறது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடன் பாகிஸ்தான் அணி மோதி வெற்றிப் பெற்றது.
இந்தப் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் வீசிய பந்து நடுவரின் காதில் விழுந்தது.இதனால் கள நடுவர் ருசிரா பல்லியகுருகே வலியால் துடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.