சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி திரைப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியுள்ளது.
இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். அனிருத் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் ரிலீஸான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், மதராஸி திரைப்படம் 100 கோடி வசூல் படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.