ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் மகுடம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
விஷாலுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் துஷாரா விஜயன் நடித்துள்ளார். விஷால் விதவிதமான கெட்டப்பில் இருக்கும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது.
இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படப்பிடிப்பை ஊட்டியில் படக்குழு நிறைவு செய்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் இதனை கேக் வெட்டி கொண்டாடினர்.