ராஜஸ்தானில் துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர், 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடந்த சம்பவம் முழுவதும் அந்தக் கடையில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
துணிக்கடையின் மூன்றாவது மாடியில் ஊழியர் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மாடியில் இருந்து தவறி விழுந்தார்.
அவருக்குக் கை, கால்கள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதனைப் பார்க்கும் பொதுமக்கள், சுவற்றில் தடுப்புகள் அமைப்பது அவசியமானது எனக் கருத்து கூறி வருகின்றனர்.