இந்த வருடத்தின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இந்த மாதத்திலேயே நிகழ உள்ளது.
2025ஆம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 2 சூரிய கிரகணமும், 2 சந்திரக் கிரகணமும் நிகழும். அந்த வகையில் ஏற்கனவே ஒரு சூரிய கிரகணம் மற்றும் 2 சந்திரக் கிரகணம் நிகழ்ந்துள்ளது.
கடைசியாகக் கடந்த 7ஆம் தேதி தான் முழு சந்திரக் கிரகணம் நிகழ்ந்து நிலவு தென்பட்டது. இதைப் பலரும் வெறும் கண்களாலேயே பார்த்து மகிழ்ந்தனர்.
அந்தவகையில், இந்த வருடத்தின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அமாவாசை நாளில், அதாவது வரும் 21-ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை நிகழ உள்ளது.
இந்தச் சூரிய கிரகணம் இரவு சுமார் 11 மணிக்குத் தொடங்கி அதிகாலை 3 மணி 23 நிமிடங்கள் வரை நீடிக்கும்.
இது இரவில் ஏற்படுவதால் இந்தியாவில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது. ஆனால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடல், தெற்கு பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிப் பெருங்கடல், பாலினீசியா, மெலனேசியா போன்ற நாடுகளில் தெரியும்.
















