பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் தனது அணுசக்தி திட்டத்தைச் சவுதி அரேபியாவிற்கு வழங்க முடியும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் சில நாட்களுக்கு முன் அந்நாட்டுக்குச் சென்றார்.
இந்தப் பயணத்தில், இளவரசர் முஹம்மதுடன் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது.
மேலும், பாகிஸ்தானும், பெரும் எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள சவுதி அரேபியாவும் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடந்தால், அது இரண்டு நாடுகளின் மீதும் நடந்த தாக்குதலாகக் கருதப்படும்.
இந்தச் சூழலில் இதுகுறித்துப் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப், பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ்த் தனது அணுசக்தி திட்டத்தை சவுதி அரேபியாவிற்கு வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.