உத்தராகண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்றார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் பேரிடரால் மின்சாரம், சாலை, நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், வீடியோ மூலம் முதல்வருக்குச் சேதங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
பின்னர், பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்புப் பணிகளைத் துரிதப்பட்டுத்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.