கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மனின் விக்கிரகம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மனின் விக்கிரகம் கொண்டு செல்லப்படுவது மரபாகும்.
அந்த வகையில் முன்னுதித்த நங்கை அம்மனுக்கான தினசரி நித்தியகாரிய பூஜைகள் முடிந்த பின்னர், சுசீந்திரத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அம்மன் விக்கிரகத்தை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது தமிழக, கேரளப் போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இதனை காண கூடிய ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.