எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ஒரு நகர்ப்புற மாவோயிஸ்ட்டை போல் செயல்படுவதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.
ராகுல் காந்தியின் ஜென் ஜீ தொடர்பான சமூக வலைதளப் பதிவுக்கு பதிலளித்த அவர், ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக ஜெப் ஜீயை ராகுல்காந்தி தூண்ட முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை ராகுல்காந்தி பாதுகாக்க வேண்டும் என்றும், வாக்குத் திருட்டு என்று கூறுவதை அவர் நிறுத்த வேண்டும் என்றும் தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.