டெல்லி பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளர் ஆர்யன் மான் வெற்றிப் பெற்றார்.
டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 52 மையங்களில் 195 வாக்குச்சாவடிகளில் நடத்தப்பட்டது.
இதில் ஏபிவிபி வேட்பாளராக ஆர்யன் மானும், காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ-ன் வேட்பாளராக ஜோஸ்லின் நந்திதா சவுத்ரியும் போட்டியிட்டனர்.
நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் ரன்தீப் ஹூடா போன்ற பிரபலங்களும் ஆர்யன் மானுக்காகப் பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் ஏபிவிபி வேட்பாளர் ஆர்யன் மான் 28 ஆயிரத்து 841 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார்.
இதன்மூலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மாணவர் அமைப்பு வேட்பாளரை விட 16 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று ஆர்யன் மான் வெற்றி வாகை சூடினார்.
தலைவர், துணைத் தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் ஆகிய 4 பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் ஏபிவிபி அமைப்பு 3 பதவிகளைக் கைப்பற்றியுள்ளது.