பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பாவின் நிறுவனர் ஹபீஸ் சயீதை சந்தித்ததற்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனக்கு நன்றித் தெரிவித்ததாக யாசின் மாலிக் தெரிவித்துள்ள கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத நிதியுதவி வழக்கில் யாசின் மாலிக் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் 2006ல் ஹபீஸ் சயீத் உடனான தனது சந்திப்பு சுயாதீன முயற்சி அல்ல என்றும், பாகிஸ்தானை சமாதானம் செய்ய இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்புக்கு பிறகு, அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் முன்னிலையில் மன்மோகன் சிங்கை மாலிக் சந்தித்ததாகவும், மாலிக்கின் அர்ப்பணிப்புக்காக மன்மோகன் சிங் நன்றித் தெரிவித்ததாகவும் அவர் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.