புயல்கள் தொடர்ச்சியாக உருவாக வேண்டிய காலத்தில் அட்லாண்டிக் கடல் அமைதியாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அட்லாண்டிக் கடலில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தான் 80 சதவிகிதப் புயல்கள் உருவாகி வீசும். இந்த ஆண்டில் பெயர் சூட்டப்பட்ட புயல்களே ஆறு மட்டும் தான். ஆனால் அட்லாண்டிக்கில் நிலைமை நிச்சயமற்றதாக இருக்கிறது என்றும் கொலோராடா பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.
கரீபியன் கடலுக்குக் கிழக்கே நூற்றுக்கணக்கான மைல்கள் தொலைவில் துண்டுதுண்டான புயல் துணுக்குகள் நிலைகொண்டிருக்கின்றன. இவை ஒருவேளை வலுப்பெற்றுப் பெரும் புயலாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.
இவற்றுக்குப் பின்னாலும் இதைப் போன்ற துணுக்குகள் இருக்கின்றன. ஆனால், இவை புயலாக உருவாக 20 சதவிகிதமே வாய்ப்பு என்கிறார்கள் வானிலையாளர்கள்.