சீனாவின் பொதுக் கழிப்பறைகளில் இனி டாய்லெட் பேப்பர் வேண்டுமானால், ஒன்று விளம்பரம் பார்க்க வேண்டும் அல்லது பணம் செலுத்த வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்
சீனாவில் உள்ள சில பொதுக் கழிப்பறைகளில், டாய்லெட் பேப்பர் வழங்கும் இயந்திரத்தில் QR குறியீடு பொருத்தப்பட்டுள்ளது. அதனை பயனர்கள் தங்கள் தொலைபேசி மூலம் ஸ்கேன் செய்த பிறகு, ஒரு சிறிய விளம்பரத்தைப் பார்க்க வேண்டும்.
விளம்பரம் முடிந்தவுடன், இயந்திரம் குறிப்பிட்ட அளவு டாய்லெட் பேப்பரை வழங்கும். அல்லது இந்திய மதிப்பில் 5 ரூபாய் செலுத்தி நேரடியாக டாய்லெட் பேப்பரைப் பெற்றுக்கொள்ளலாம்.
அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கட்டுப்படுத்தி பணமாக்கும் சீனாவின் இந்த முயற்சிக்குச் சமூக வலைதளங்களில் கடுமையாகக் கண்டங்கள் எழுந்துள்ளன.
அவசரமான சூழ்நிலைகளில் ஒருவரது தொலைபேசியில் சார்ஜ் இல்லாமல் இருக்கலாம், இணைய இணைப்பு இல்லாமல் இருக்கலாம் அல்லது சில்லறைப் பணம் இல்லாமல் இருக்கலாம்.
இதுபோன்ற சமயங்களில் அவர்கள் டாய்லெட் பேப்பர் இல்லாமல் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.