பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான தொடர்பு உலகமே அறியும் என வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசியவர்,
பயங்கரவாத விவகாரங்களில் பாகிஸ்தான் அரசுக்கு உள்ள தொடர்பை உலகம் அறிந்திருக்கிறது என்றும் பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பு எங்களுக்குத் தெளிவாக தெரியும் என்றும் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவின் வீடியோக்களில் இவைத் தான் இடம்பெறுகின்றன என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டார்.