லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் காசிம் வெளியிட்டுள்ள வீடியோவின் மூலம், தங்கள் நாட்டில் தீவிரவாத முகாம்கள் இயங்கவில்லை எனப் பாகிஸ்தான் பொய் கூறியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அப்போது தங்கள் நாட்டில் தீவிரவாத முகாம்களே இயங்கவில்லை என உலக அரங்கில் பாகிஸ்தான் கூறியது.
இந்நிலையில் லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர்க் காசிம், இந்தியாவால் அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம் ஒன்றின் முன்னர் நின்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் அழிக்கப்பட்ட இந்த முகாமில் பயங்கவாத பயிற்சி பெற்று பலர் வெற்றிப் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிதாக அமைக்கப்படும் முகாம் இந்தியா அழித்ததை விட பெரியதாக இருக்கும் எனக் கூறிய காசிம், ஜிஹாதி பயிற்சி திட்டத்தில் இளைஞர்கள் சேர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தைப் பாகிஸ்தான் ஊக்குவிப்பது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.