ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் மூலம் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், ஜிஎஸ்டி வரி குறைப்பு 140 கோடி மக்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் 12% வரி விதிக்கப்பட்டு வந்த 99 பொருட்கள் 5%-க்கு மாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்ட பிறகு வரி செலுத்தும் வியாபாரிகள் எண்ணிக்கை ஒன்றரை கோடியாக உயர்ந்துள்ளதாகவும், ஜிஎஸ்டி குறித்து நாடகம் நடத்த வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜிஎஸ்டி குறித்த ராகுல்காந்தியின் பேச்சை வியாபாரிகள் பொய்யாக்கி உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.