ஜிஎஸ்டி வரி விதிப்பு ஓரடுக்காக மாறவும் வாய்ப்பு உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், ஜிஎஸ்டி வருவாய் சுமார் ரூ.22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
ஜிஎஸ்டிக்கு முன்பாகவே ஆயுள் காப்பீடு மீது வரி விதிக்கப்பட்டு வந்தது என்றும், ஆயுள் காப்பீடுகள் மீதான ஜிஎஸ்டி வரிகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நடுத்தர மக்களுக்கான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி விதிப்பு ஓரடுக்காக மாறவும் வாய்ப்பு உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.