கோவையில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளையொட்டி 75 ஓவியங்கள் இடம் பெற்றுள்ள கண்காட்சி தொடங்கப்பட்டது.
கோவையில் பாஜக சார்பில் ‘மோடியின் தொழில் மகள்’ எனும் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நிகழ்ச்சி நடைபெற உள்ள திடலில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்த நாளையொட்டி, 75 ஓவியங்கள் இடம் பெற்றுள்ள கண்காட்சி தொடங்கப்பட்டது.
கண்காட்சியில் பிரதமர் மோடியின், சிறு வயது முதல் பிரதமர் பொறுப்பு ஏற்றது வரையிலான பல்வேறு ஓவியங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியை மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சேலஞ்சர் துரை ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.