நெல்லை மாவட்டம், சேரன்மாதேவி அருகே மேட்டு சுடலை ஆண்டவர் கோயிலில் மஞ்சள் நீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
கோவிந்தப்பேரி பகுதியில் உள்ள மேட்டு சுடலை ஆண்டவர் கோயிலில் கொடை விழா கடந்த வாரம் தொடங்கிய நிலையில், அதன் சிகர நிகழ்ச்சிகளுள் ஒன்றான மஞ்சள் நீராட்டு நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
அப்போது சாமி சன்னதி முன் 50-க்கும் மேற்பட்ட பானைகளில் மஞ்சள் நீர் கொதிக்க வைக்கப்பட்டது. பானைகளில் மஞ்சள் நீர் கொதித்து வந்தபோது பக்தி பரவசத்தில் திளைத்த சாமியாடிகள், கையில் வைத்திருந்த தென்னம்பாளையால் கொதிக்கும் மஞ்சள் நீரை தலையில் வாரியடித்து ஆக்கிரோஷமாக சாமி ஆடினர். இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகோண்டு சாமி தரிசனம் செய்தனர்.