புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை தரிசனத்திற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். .
300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு மூன்று மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது. இதனால் புரட்டாசி மாதத்தில் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள், திருப்பதியில் வழங்கப்படும் இலவச டோக்கன் பெறுவதற்காக, மலையடிவாரத்திலுள்ள பூதேவி அரங்கம், பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்ரீநிவாச நிலையம், ரயில் நிலையம் அருகிலுள்ள விஷ்ணு நிவாச நிலையம் ஆகிய இடங்களில் குவிந்தனர்.
நாளொன்றுக்கு 16 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில், விநியோகம் தொடங்கிய 2 மணி நேரத்திலேயே அனைத்து டோக்கன்களும் காலியாகிவிட்டன. டோக்கன் பெற முடியாத சுவாமி தரிசனத்திற்காக அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.