சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் தேர்வு நடைபெற்றுக்கொண்டு இருந்த அரசுப்பள்ளியில் அமைச்சர்கள் விழா நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பல்லாவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்று திறந்து வைத்தனர். அப்போது மேளதாளத்துடன் இவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.
அதே நேரத்தில் பள்ளியில் காலாண்டு தேர்வும் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. விழாவில் அமைக்கப்பட்டு இருந்த இசைக் கருவியால் மாணவர்கள் தேர்வை கவனத்துடன் எழுத முடியவில்லை எனக்கூறப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் கே.என்.நேரு நாங்கள் ஒருபுறம் விழா நடத்தினோம், தேர்வு ஒருபுறம் நடக்கிறது என பதிலளித்தார்.