ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் மேரிகோ லிமிடெட் நிறுவனத்தின் கொப்பரை கொள்முதல் நிலையத்தில் வருமான வரித்துறையினர் 4வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி காந்தி வீதியில் மெய்யழகன் என்பவருக்கு சொந்தமான மேரிகோ லிமிடெட் என்ற கொப்பரை கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 17ஆம் தேதி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று, பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் மேரிகோ லிமிடெட் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சோதனைக்குப் பிறகே வரி ஏய்ப்பு முறைகேடுகள் குறித்த ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது தெரியவரும்.